Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ஸ்ரீவி.,ஆண்டாள் தேருக்கு ரூ.5 லட்சத்தில் புது வடம்

ஸ்ரீவி.,ஆண்டாள் தேருக்கு ரூ.5 லட்சத்தில் புது வடம்

ஸ்ரீவி.,ஆண்டாள் தேருக்கு ரூ.5 லட்சத்தில் புது வடம்

ஸ்ரீவி.,ஆண்டாள் தேருக்கு ரூ.5 லட்சத்தில் புது வடம்

ADDED : ஜூலை 26, 2011 09:49 PM


Google News

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் தேரை எளிதில் இழுப்பதற்கு வசதியாக ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் நைலான், பருத்தி இழைகளால் செய்யப்பட்ட வடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிதேரோட்டம் ஆக.2ம் தேதி நடக்கிறது.

கடந்தாண்டு வரை தேங்காய் முடியால் செய்யப்பட்ட வடத்தை கட்டி தேரை இழுத்து வந்தனர். இந்த வடம் கனமாக இருந்ததால் அதை தூக்குவதற்கே பக்தர்கள் சிரமம் பட்டனர். இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக மும்பையிலிருந்து பருத்தி, நைலான் இழைகளால் செய்யப்பட்ட வடம் உருவாக்கப்பட்டு, ஸ்ரீவி.,க்கு கொண்டு வரப்பட்டுள்ளது. செயல் அலுவலர் குருநாதன் கூறுகையில், ''தேரை எளிதாக இழுப்பதற்காக ஐந்து லட்சம் ரூபாய் செலவில் 220 மீட்டர் நீளமுள்ள புதிய வடம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வடம் தேரில் உள்ள ஒன்பது இடங்களிலும் கட்டப்படும்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us