சீனாவில் புல்லட் ரயில்களின் வேகம்திடீர் குறைப்பு
சீனாவில் புல்லட் ரயில்களின் வேகம்திடீர் குறைப்பு
சீனாவில் புல்லட் ரயில்களின் வேகம்திடீர் குறைப்பு
ADDED : ஆக 11, 2011 11:31 PM

பீஜிங்: சீனாவில், கடந்த மாதம் நடந்த ரயில் விபத்தின் எதிரொலியாக, புல்லட் ரயில்களின் வேகத்தை குறைக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில், 13 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, புல்லட் ரயில்களுக்கான தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே பீஜிங் - ஷாங்காய் இடையிலான, 1,600 கிலோ மீட்டர் தூரத்துக்கு, தற்போது புல்லட் ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்த தூரத்தை இந்த ரயில்கள் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.கடந்த மாதம் 23ம்தேதி, ஷிஜியாங் மாகாணத்தில் இரண்டு புல்லட் ரயில்கள் மோதிக்கொண்டதில், 40 பேர் பலியாகினர். இந்த சம்பவத்துக்கு இன்டர்நெட் பிளாக் மூலம் 48 கோடி பேர், அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.இதை தொடர்ந்து, புல்லட் ரயில்களின் வேகத்தை குறைக்க, பிரதமர் வென் ஜியாபோ தலைமையிலான அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. தற்போது 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்கள், இனி 300 கிலோ மீட்டர் வேகத்திலும், 300 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் இனி 250 கிலோ மீட்டர் வேகத்திலும், 250 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் ரயில்கள் இனி 200 கிலோ மீட்டர் வேகத்திலும், 200 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்கள் இனி 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்பட வேண்டும் என ரயில்வே துறைக்கு, பிரதமர் வென் ஜியாபோ உத்தரவிட்டுள்ளார். அதிவேக ரயில்களின் மூலம், இந்த ஆண்டு ரயில்வே அமைச்சகத்துக்கு 85 சதவீத லாபம் கிடைத்ததாக நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.