/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க., தி.மு.க., மனு தாக்கல்கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க., தி.மு.க., மனு தாக்கல்
கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க., தி.மு.க., மனு தாக்கல்
கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க., தி.மு.க., மனு தாக்கல்
கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க., தி.மு.க., மனு தாக்கல்
ADDED : செப் 29, 2011 10:16 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,
சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜயலட்சுமி, கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.,
தாமோதரன் உடன் சென்று நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். கிணத்துக்கடவு
பேரூராட்சித் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., நகர செயலாளர் செந்தில்குமார்
மனைவி விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கிணத்துக்கடவு
எம்.எல்.ஏ., தாமோதரன் உடன் சென்று நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் காலை
11.15 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். கிணத்துக்கடவு பேரூராட்சித்
தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் ஏற்கனவே தலைவர் பதவி வகித்து வரும்
விஜயாகதிர்வேல் நேற்று 11.00 மணியளவில் பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று
வேட்புமனு தாக்கல் செய்தார். இவருடன் கவுன்சிலர் கதிர்வேல், துணைத் தலைவர்
கனகராஜ் ஆகியோர் உடன் சென்றனர். ஊராட்சி தலைவருக்கு மனு தாககல்:
கிணத்துக்கடவு ஒன்றியம் செட்டியக்காபாளையம் ஊராட்சியில் தற்போதைய ஊராட்சி
தலைவர் பேச்சிமுத்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
செட்டியக்காபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக
பேச்சிமுத்து மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கு முன், பெண் வேட்பாளர்
நிற்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட 1996ம் ஆண்டு, இவரது மனைவி கனகவல்லி
சுயேச்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார்.
தொடர்ந்து 2001ல் இவரது உறவினர் லதாதுரை நின்று வெற்றி பெற்றார். கடந்த
2006ல் பொது வேட்பாளர் என அறிவிக்கப்பட்ட நிலையில், பேச்சிமுத்து சுயேச்சை
வேட்பாளராக நின்று வெற்றி பெற்று தலைவராக பணியாற்றி வருகிறார்.இம்முறையும்
தலைவர் பதவிக்கு இவரே போட்டியிட முடிவு செய்து, நேற்று வேட்புமனுவினை
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளார்.