Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/வேதாசலம் நகரில் சாலைகள் அமைக்க 10 லட்சம் ரூபாய்

வேதாசலம் நகரில் சாலைகள் அமைக்க 10 லட்சம் ரூபாய்

வேதாசலம் நகரில் சாலைகள் அமைக்க 10 லட்சம் ரூபாய்

வேதாசலம் நகரில் சாலைகள் அமைக்க 10 லட்சம் ரூபாய்

ADDED : ஆக 29, 2011 11:06 PM


Google News
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வேதாசலம் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், எம்.எல்.ஏ., சோமசுந்தரத்திற்கு பாராட்டு விழா, வேதாசலம் நகர் தகவல் கையேடு வெளியீட்டு விழா, அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆகிய முப்பெரும் விழா நடந்தது.சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கவுரவத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். செவிலிமேடு பேரூராட்சி தலைவர் ஏழுமலை, செயல் அலுவலர் ரவிக்குமார், பல்லவன் பொறியியல் கல்லூரி முதல்வர் தாமோதரன், சோழன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் சஞ்சீவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.எம்.எல்.ஏ., சோமசுந்தரம், கையேடை வெளியிட்டு பேசும்போது,''வேதாசலம் நகரில் சாலைகள் அமைக்க, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய், பத்தாம் வகுப்பு தேர்வில், கல்வி மாவட்ட அளவில், முதலிடம் பெறும் வேதாசலம் நகர் மாணவருக்கு, சொந்த பணத்தில் 50 ஆயிரம் ரூபாய், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றால் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். வேதாசலம் நகரில் சமுதாயக்கூடம், பூங்கா அமைக்கவும், பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.விழாவில் நல்லாசிரியர் விருது பெற்ற உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், ஏகனாம்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சுரேஷாதேவி, ஐயங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜிவி, சிட்டியம்பாக்கம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாலா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு, திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பினர் போஸ் ஊக்கப்பரிசு வழங்கினார். சங்கச் செயலர் சம்பத் வரவேற்றார். பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us