Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உறவுகளை மேம்படுத்தும், உங்கள் முதலீடு : ஓணம் விழாவில் அமைச்சர் பேச்சு

உறவுகளை மேம்படுத்தும், உங்கள் முதலீடு : ஓணம் விழாவில் அமைச்சர் பேச்சு

உறவுகளை மேம்படுத்தும், உங்கள் முதலீடு : ஓணம் விழாவில் அமைச்சர் பேச்சு

உறவுகளை மேம்படுத்தும், உங்கள் முதலீடு : ஓணம் விழாவில் அமைச்சர் பேச்சு

ADDED : அக் 02, 2011 09:09 PM


Google News

மேட்டுப்பாளையம் : ''இங்கு சம்பாதித்த செல்வங்களை கேரளாவில் முதலீடு செய்யாமல், இங்கேயே முதலீடு செய்தால், நல்லுறவு மேம்படும்,'' என, கேரள வேளாண் அமைச்சர் மோகனன் பேசினார்.

மேட்டுப்பாளையம் கேரளா சமாஜம் சார்பில் ஓணம் திருவிழா கொண்டாடப்பட்டது.

கோவை மலையாள சமாஜ தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். கேரள மாநில வேளாண் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் மோகனன், அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது. காந்தி பிறந்த நாளில், ஜாதி, மதம் இன வேறுபாடு இல்லாமல் ஓணம் விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. நாட்டில் பல இடங்களில் வாழும் கேரள மக்கள், அந்தந்த பகுதி மக்களோடு சகோதர, சகோதரிகளாக பழகுவதும், பல சமூக பணிகளில் ஈடுபடுவதும் பெருமையை அளிக்கிறது. கேரள மக்கள் இங்கு சம்பாதித்த செல்வங்களை கேரளாவில் முதலீடு செய்யாமல், அந்தந்த பகுதியில் முதலீடு செய்தால், பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதோடு, பொருளாதாரமும் மேம்படும். இதனால் நமக்குள் சமூக நல்லுறவு ஏற்படும்.

விவசாயம் நாட்டின் முதுகெலும்பு, இதில் அதிக இளைஞர்கள் ஈடுபட வேண்டும். பி.இ., டாக்டருக்கு படிப்பவர்கள் பொது நலனில் அக்கறை காட்ட வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து திருவனந்தபுரம், மங்களுர், கோவா ஆகிய ஊர்களுக்கு ரயில் விட வேண்டுமென்று, பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருவதாக கூறினீர்கள். இம்மாதம் 26ம் தேதி பாலக்காட்டில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை திறப்பு விழாவுக்கு மத்திய ரயில்வே அமைச்சர் வருகிறார். அவரிடம் இந்த கோரிக்கையை சொல்லி, ரயில் விட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கேரள அமைச்சர் பேசினார்.

விழாவில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ், பாதிரியார் பிரான்சிஸ், இமாம் முகமது முகைதின், முன்னாள் கவுன்சிலர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. மேட்டுப்பாளையம் கேரளா சமாஜ தலைவர் திவாகரன் வரவேற்றார். செயலாளர் குமார் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us