/உள்ளூர் செய்திகள்/கடலூர்/செஸ் போட்டியில் வென்றமாணவர்களுக்கு பரிசளிப்புசெஸ் போட்டியில் வென்றமாணவர்களுக்கு பரிசளிப்பு
செஸ் போட்டியில் வென்றமாணவர்களுக்கு பரிசளிப்பு
செஸ் போட்டியில் வென்றமாணவர்களுக்கு பரிசளிப்பு
செஸ் போட்டியில் வென்றமாணவர்களுக்கு பரிசளிப்பு
ADDED : செப் 14, 2011 12:10 AM
கடலூர்:கடலூரில் செஸ் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர்
அமுதவல்லி பரிசு வழங்கினார்.கடலூர் மாவட்ட செஸ் அகாடமி மற்றும் வள்ளி
விலாஸ் குழுமம் சார்பில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.
இப்போட்டியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 320 மாணவ, மாணவிகள்
பங்கேற்றனர்.
போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு கடலூர் முகாம் அலுவலகத்தில் கலெக்டர்
அமுதவல்லி நேற்று பரிசு வழங்கி பாராட்டினார்.விளையாட்டு அலுவலர் திருமுகம்,
செஸ் அகாடமி தலைவர் பிரேம்குமார், செயலர் கார்த்திக் கண்ணா, சென்ட்ரல்
ரோட்டரி சங்கத் தலைவர் சண்முகம், பொருளாளர் ரூபவேல், இணைச் செயலர்
மூர்த்தி, துணைத் தலைவர் கபில், ரோட்டராக்ட் தலைவர் அருண் ஆகியோர்
உடனிருந்தனர்.