/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் இன்று தேசியக்கருத்தரங்கம்குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் இன்று தேசியக்கருத்தரங்கம்
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் இன்று தேசியக்கருத்தரங்கம்
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் இன்று தேசியக்கருத்தரங்கம்
குற்றாலம் ஸ்ரீ பராசக்தி கல்லூரியில் இன்று தேசியக்கருத்தரங்கம்
குற்றாலம் : குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் இன்று 28ந்தேதி தேசிய கருத்தரங்கம் நடக்கிறது.
நிகழ்ச்சிக்கு பராசக்தி கல்லூரி முதல்வர் பேராசிரியை இராஜேஸ்வரி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்து துவக்கிவைக்கிறார். தமிழ்த்துறைத்தலைவர் போராசிரியை வேலம்மாள் வரவேற்றுபேசுகிறார். கல்லூரி செயலாளர் புகழேந்திரன் வாழ்த்துரை வழங்குகிறார். உதவி பேராசிரயை மகேஸ்வரி அறிமுகவுரையாற்றுகிறார். குப்பம் திராவிட பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் விவேகானந்தகோபால், சாகித்திஅகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பொன்னீலன் சிறப்புரையாற்றுகின்றனர்.
உதவி பேராசிரியை ஈஸ்வரி நன்றியுரை வழங்கிறார். மாலை 2மணிக்கு நடக்கும் நிகழ்ச்சிக்கு பேராசிரியை மகாலட்சுமி வரவேற்புரை நிகழ்த்துகிறார். உதவி பேராசிரியை துர்காதேவி அறிமுக உரையாற்றுகிறார். நெல்லை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றிய துறை இணை பேராசிரியர் ராமசந்திரன், சென்னை நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ் தலைவர் நல்லகண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார். நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் மதுரை மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை தமிழ்த்துறைப்பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் செய்துவருகின்றனர்.