/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மின் ஊழியர் அமைப்புகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மின் ஊழியர் அமைப்புகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் அமைப்புகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் அமைப்புகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் அமைப்புகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 21, 2011 10:06 PM
விழுப்புரம்:விழுப்புரத்தில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யூ.,)
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை
பொறியாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் விஜயகுமார்
தலைமை தாங்கினார்.
தமிழ்ச்செல்வன், வெங்கடகிருஷ்ணன், சலீம் முன்னிலை
வகித்தனர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் குமார் பேசினார். மாநில செயலாளர்
புரு÷ஷாத்தமன், திட்ட செயலாளர் அம்பிகாபதி கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., ராமமூர்த்தி வாழ்த்தி பேசினார். மின்
வாரிய பிரிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மின் ஊழியர்களுக்கு புதிய ஊதிய
உயர்வு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மஸ்தூர்களுக்கு கள உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர். துணை செயலாளர் ஏழுமலை நன்றி
கூறினார்.