Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/மோசமான நகராட்சிச் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

மோசமான நகராட்சிச் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

மோசமான நகராட்சிச் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

மோசமான நகராட்சிச் சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை

ADDED : செப் 16, 2011 12:13 AM


Google News

திருத்துறைப்பூண்டி: நகராட்சியின் வசம் உள்ள சாலையை செப்பனிடாமல், மெத்தனப் போக்குடன் இருக்கும் நகராட்சி நிர்வாகத்தால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் 50 மீட்டர் சாலை திருத்துறைப்பூண்டி நகராட்சியின் வசம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, இந்த சாலை செப்பனிடப்படவில்லை. ஆங்காங்கே குண்டும், குழியுமாக கிடக்கும் சாலையை ஒழுங்காக பராமரிக்கும் நெடுஞ்சாலைத்துறையிடமும் ஒப்படைக்கவில்லை. 'சாலையை செப்பனிட்ட பின்தான் பெற்றுக் கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை கூறியிருக்கிறது'. நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், பல மாதங்களாகியும் சாலை பராமரித்து வழங்கப்படவில்லை. அப்படி சாலையை வழங்கியிருந்தால், நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அவ்வப்போது செப்பனிட்டு இருப்பர். பராமரிப்பு இல்லாமல் கிடக்கும் சாலையில், டூவீலர்கள் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் விழாமல் வாகனத்தை ஓட்ட முயலும்போது பாதசாரிகள் மீது மோதி நாள்தோறும் விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதேநிலை நீடித்தால் பாதசாரிகள் அல்லது வாகன ஓட்டிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்படும். எனவே, உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையை செப்பனிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us