நிலக்கோட்டை:குல்லிசெட்டிபட்டி காமாட்சி அம்மன் கோயிலில் உண்டியல் திருடு போனது.
கோயில் பின்பக்க கதவை உடைத்து, கோயிலுக்குள் இருந்து உண்டியலை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். உண்டியலுக்குள் இருந்த அம்மனின் ஆறு பவுன் தங்க சங்கிலி, தோடு, மூக்குத்தி ஆகியவையும் திருடு போனது. நிர்வாகி கனராஜ் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரித்து வருகிறார்.


