Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/உடல் எரிந்த நிலையில் பெண் மர்ம சாவு கொலை செய்யப்பட்டதாக புகார் : ஆர்.டி.ஓ. விசாரணை

உடல் எரிந்த நிலையில் பெண் மர்ம சாவு கொலை செய்யப்பட்டதாக புகார் : ஆர்.டி.ஓ. விசாரணை

உடல் எரிந்த நிலையில் பெண் மர்ம சாவு கொலை செய்யப்பட்டதாக புகார் : ஆர்.டி.ஓ. விசாரணை

உடல் எரிந்த நிலையில் பெண் மர்ம சாவு கொலை செய்யப்பட்டதாக புகார் : ஆர்.டி.ஓ. விசாரணை

ADDED : ஜூலை 26, 2011 12:57 AM


Google News

நாகர்கோவில் : நாகர்கோவிலில் உடல் எரிந்த நிலையில் பெண் மர்மமாக இறந்து கிடந்தார்.

அவரை கொலை செய்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்தவர் கிங்ஸ்லின்(40). இவரது மனைவி ஜோசிலிட்டி(33). இவர்களுக்கு ஆலன்பாபு(4), ரோஷன்பாபு(3) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கிங்ஸ்லின் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 5 மாதத்திற்கு முன்பு வந்துள்ளார். குடிபழக்கம் இருந்துள்ள நிலையில் மனைவியுடன் தகராறு இருந்து வந்துள்ளது.மேலும் வரதட்சணையாக 80 பவுன் நகையும், 5 லட்சம் ரூபாயும் கொடுத்ததாக கூறப்படுகிறது.



மனைவி பெயருக்கு மாமனார் வீட்டில் கொடுத்த 80 செண்ட் நிலத்தையும் தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கிங்ஸ்லின் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜோசிலிட்டி நேற்று முன்தினம் இரவு தீவைத்து தற்கொலை செய்துகொண்டதாக அவரின் தந்தை சூசைநாயகத்துக்கு தகவல் வந்துள்ளது.இதை தொடர்ந்து அங்கே வந்த அவர் வீட்டு கழிவறையில் எரிந்த நிலையில் உடல்கருகி மகள் இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மகள் ஜோசிலிட்டி தற்கொலை செய்யவில்லை. அவளை கொலை செய்து எரித்துள்ளனர் என்று நேசமணி போலீசில் சூசைநாயகம் புகார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஜோசிலிட்டியின் கணவர் கிங்ஸ்லினும், மாமனார் அம்புரோசும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் சுடலைமணி, சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஜோசிலிட்டியின் வீட்டு பெட்ரூமில் ரத்த கறையாக கிடந்தது. இதனால் இந்த மர்ம சாவு குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. நேசமணிநகர் போலீசார் வழக்குபதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோசிலிட்டியை கொலைசெய்து பின்னர் கழிவறையில் வைத்து எரித்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. ஜோசிலிட்டிக்கு திருமணமாகி 5 வருடமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெண் எரிக்கப்பட்ட நிலையில் மர்மமாக இறந்துகிடந்த சம்பவம் நேற்று புன்னைநகர், மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us