
'புதுமையா இருங்க...'மதுரையில் தொல்லியல் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் பங்கேற்றார்.அவர் பேசும்போது, 'அமெரிக்காவில் சுற்றுலா பயணிகளிடம், அங்குள்ள பழமையை சொல்லி 'கைடு'கள் சுற்றிக் காட்டுகின்றனர்.
'இதற்கு நான்,'எங்கள் நாட்டில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சீத்தலைச்சாத்தனார் என்ற புலவர், மணிமேகலை காப்பியத்தில் இதை எழுதியுள்ளார். இளவரசன் உதயகுமாரன் துரத்தும் போது, மணிமேகலை பளிங்கு மாளிகைக்குள் பதுங்கினார். அதில், உள்ளே இருப்பது வெளியே தெரியாது. ஆனால், வெளியே நடப்பதை உள்ளே காட்டும் என குறிப்பிட்டுள்ளார்' என்றேன். இதுபோன்ற பாரம்பரிய தகவல்களை, நம் தொல்லியல் துறை தான் மக்களுக்கு உணர்த்த வேண்டும்' என்றார்.இதைகேட்ட பார்வையாளர் ஒருவர், 'அதாவது தொல்லியல்துறை, இன்னும் பழமையுடன் இருக்காமல், புதுமையா பணியாற்றணும்னு சொல்றாரு' என, 'கமென்ட்' அடித்து நகர்ந்தார்.
'நாங்களும் ஒதுக்கி வச்சிருவோம்!'உத்திரமேரூரை அடுத்த பெருநகரில் கிராம சபை கூட்டம் நடந்தது. அதில், காஞ்சிபுரம் காங்., எம்.பி., விஸ்வநாதன் பேசும்போது, 'நான் கடலூர் மாவட்டம், குடிகாடு கிராமத்தில் பிறந்தேன். பள்ளி விடுமுறையில், இளைஞர்களை ஒன்றிணைத்து, 'நேரு நற்பணி மன்றம்' துவக்கி, பொதுப்பணிகளை செய்தேன்.
'குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது, நாட்டார் கடையில் பொருட்கள் வாங்கக் கூடாது; யாரிடமும் பேசக்கூடாது, கோவிலுக்கு போகக் கூடாது' என உத்தரவிட்டனர். அதை ஏற்றுக்கொள்ளாமல், குடும்பத்துடன் கிராமத்தை விட்டே வெளியேறினோம். பின், நான் படித்து பட்டம் பெற்று, எம்.பி.,யானதும்தான், சொந்த ஊருக்கு சென்றேன்' என்றார்.இதை கேட்ட ஊர்க்காரர், 'அதுக்காக தொகுதிக்கு நல்லது செய்யாம போயிடாதீங்க... அப்புறம் நாங்களும் உங்களை தேர்தல்ல ஒதுக்கி வச்சிருவோம்' என முணுமுணுத்தார்.