/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அரசு நிலத்தை ஆக்கிரமித்துகட்டப்பட்ட வீடுகள் இடிப்புஅரசு நிலத்தை ஆக்கிரமித்துகட்டப்பட்ட வீடுகள் இடிப்பு
அரசு நிலத்தை ஆக்கிரமித்துகட்டப்பட்ட வீடுகள் இடிப்பு
அரசு நிலத்தை ஆக்கிரமித்துகட்டப்பட்ட வீடுகள் இடிப்பு
அரசு நிலத்தை ஆக்கிரமித்துகட்டப்பட்ட வீடுகள் இடிப்பு
ADDED : அக் 08, 2011 01:17 AM
திருவள்ளூர்:அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை,
வருவாய்த் துறையினர் இடித்துத் தள்ளினர்.திருவள்ளூரில், சுகாதாரத்
துறையினர், மருந்துகளை இருப்பு வைப்பதற்காக, மருந்து கிடங்கு கட்ட
தீர்மானித்துள்ளனர். இதற்காக, காக்களூர் - புட்ளூர் சாலையில், 5.5 ஏக்கர்
நிலம், சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த நிலத்தில், ஏராளமானோர்,
பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில், மேலும்
பல குடிசைகள் கட்டப்பட்டு வருவதாக, வருவாய் துறையினருக்கு தகவல்
கிடைத்தது.இதையடுத்து, திருவள்ளூர் தாசில்தார் அந்தோணி தலைமையில்,
அதிகாரிகள், அண்மையில் அந்த இடத்தை பார்வையிட்டனர்.
அப்போது, அரசு நிலம்
ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த விவரம் தெரியவந்தது.இதையடுத்து, வருவாய்த்
துறையினர், புதிதாக கட்டப்பட்ட குடிசை வீடுகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம்
இடித்து தள்ளினர். 'வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம்
தரப்படும்.ஏற்கனவே கட்டப்பட்டுள்ள வீடுகளும் விரைவில் இடிக்கப்படும்' என,
வருவாய்த் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.வீடுகளை இடித்த போது, அதன்
உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு சிறிது நேரம்
பதட்டம் நிலவியது.


