Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு

உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு

உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு

உழவர் சந்தைகளில் கடைகளை நடத்த ஆர்வமில்லை : விற்பனை குறைவால் விவசாயிகள் புறக்கணிப்பு

ADDED : செப் 21, 2011 01:32 AM


Google News

திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கும் உழவர் சந்தைகளில், கடைகளை நடத்த, விவசாயிகள் ஆர்வம் காட்டாததால், உழவர் சந்தைகள், களை இழந்து காணப்படுகின்றன.

விற்பனை குறைவு காரணமாக, உழவர் சந்தைகளை விவசாயிகள் புறக்கணிப்பதால், மாவட்டத்தில் மொத்தமுள்ள ஐந்து உழவர் சந்தைகளில் செயல்பட்டு வந்த, 146 கடைகளில் வெறும், 39 கடைகள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை கமிஷன் இல்லாமல் விற்பனை செய்யவும், உரிய விலை கிடைக்கவும், விவசாயிகள் பயனடையும் வகையிலும், தி.மு.க., ஆட்சியில் உழவர் சந்தை திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த சந்தையில் விவசாயிகள், தாங்கள் பயிர் செய்த காய்கறிகளை அறுவடை செய்து, அவர்களே விற்றுக் கொள்ளலாம். இதற்காக விவசாயிகள் எந்தவித கமிஷனும் தர வேண்டியதில்லை. மேலும், விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இலவசமாக கடை ஒதுக்கி, தராசு மற்றும் எடைக் கற்களையும் வழங்கி வருகிறது.



குறைந்தளவு கடைகள்: திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, அம்பத்தூர், நாரவாரிகுப்பம், பருத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் உழவர் சந்தைகள் உள்ளன. துவக்கத்தில் நன்றாக செயல்பட்டு வந்த உழவர் சந்தை, படிப்படியாக விவசாயிகள் வருகை குறைந்ததால், மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அரக்கோணம் சாலையில் செயல்பட்டு வரும், திருத்தணி உழவர் சந்தையில், 42 கடைகள் உள்ளன. இந்த உழவர் சந்தை, 2000ல், அக்டோபர் 25ம் தேதி திறக்கப்பட்டது. துவக்கத்தில் விவசாயிகள் ஆர்வமாக காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்தனர். பின்னர் படிப்படியாக குறைந்து, தற்போது 8 கடைகள் மட்டுமே இயங்குகின்றன.

இக்கடைகளிலும் விவசாயிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்வம் இல்லை: சில வியாபாரிகள் இலவசமாக கடை கிடைக்கிறது என்பதால்தான், உழவர் சந்தையில் காய்கறி கடைகளை வைத்து நடத்தி வருகின்றனர்.



தற்போது வேளாண் மை கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் கடையிலிருந்து திருத்தணி, திருவாலங்காடு, மத்தூர் ஆகிய கோவில்களுக்கும், மாணவர் விடுதி மற்றும் கிளை சிறைச்சாலை ஆகியவைகளுக்கு மட்டும் காய்கறிகள் சப்ளை செய்யப்படுகின்றன. ஆனால், பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால், விவசாயிகளிடம் ஆர்வம் குறைந்துவிட்டது. இதனால், தனியார் காய்கறி மார்க்கெட்டிற்கு மக்கள் செல்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் சில மாதங்களில், உழவர் சந்தை மூடுவிழா காணும் நிலை ஏற்படும். இதுகுறித்து, காஞ்சிபுரம் வேளாண்மை விற்பனைத்துறை அதிகாரி கூறுகையில், 'உழவர் சந்தை மூன்று ஆண்டுகளாக, காஞ்சிபுரம் வேளாண்மை விற்பனைக் குழு மூலம் செயல்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்திருக்கும். விவசாயிகள் வந்து கடையை தேர்ந்தெடுத்து காய்கறிகளை விற்பனை செய்து கொள்ளலாம்.

தற்போது, எட்டு முதல் பத்து கடைகள் வரை தான் இயங்குகின்றன. விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள் ளது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைவாலும் பெரும்பாலான விவசாயிகள், விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டுவதில் லை. குறிப்பாக, காய்கறி வகைகளை பயிர் செய்வதில் அக்கறை காட்டுவது இல்லை,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us