ADDED : செப் 03, 2011 01:44 AM
கடலூர் : கடலூரில் ஐஸ்வர்யா மகளிர் மன்றம் மற்றும் இந்தியக் குழந்தைகள் நலச் சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார்.
இந்திய குழந்தைகள் நலச் சங்க பொதுச் செயலர் சந்திரா தணிகாசலம் குழந்தைகளின் பிரச்னை மற்றும் தீர்வு குறித்து பேசினார். டி.எஸ்.பி., வனிதா மரக்கன்றுகள் நட்டு முகாமை துவக்கி வைத்தார்.மகளிர் மன்ற செயலர் பிரேமலதா திட்டத்தின் நோக்கம் குறித்து விளக்க உரையாற்றினர். துணைத் தலைவர் லட்சுமி, காந்திமதி சத்யா, ஸ்டெல்லா, பத்மினி உட்பட பலர் பங்கேற்றனர். ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.