/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்புதர்மபுரி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
தர்மபுரி நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : செப் 27, 2011 11:40 PM
தர்மபுரி: தர்மபுரி நகராட்சி வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க.,
வேட்பாளர்கள் நீண்ட இழுபறிக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி
நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிட அ.தி.மு.க.,வினர் கட்சி
தலைமையிடம் விருப்ப மனு அளித்தனர். தர்மபுரி நகர அ.தி.மு.க.,வில்
நிலவிவரும் கோஷ்டிபூசல் காரணமாக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாமல்
இருந்தது. இது தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை முடிவில் இழுபறியால் இருந்து
வந்த வேட்பாளர் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டது. ஒன்றாவது வார்டு சங்கர்,
இரண்டாவது வார்டு செல்வி, மூன்றாவதுவது வார்டு மகேஷ்வரி, நான்காவது வார்டு
மாதையன், ஐந்தாவது வார்டு செல்வி திருப்பதி, ஆறாவது வார்டு சர்புன்னிஸா,
ஏழாவது வார்டு செந்தில், எட்டாவது வார்டு பழனியம்மாள், ஒன்பதாவது வார்டு
சந்திரா முனியப்பன், பத்தாவது ரேணுகாதேவி, 11வது வார்டு கண்ணன், 12வது
வார்டு முருகன், 13வது வார்டு சக்திவேல், 14வது வார்டு மதியழகன், 15வது
வார்டு மல்லிகா, 16வது வார்டு கலைச்செல்வி, 17வது வார்டு கண்ணன், 18வது
வார்டு குமார், 19வது வார்டு மணிபாலன், 20வது வார்டு சக்தி, 21வது வார்டு
விஜயகுமார், 22வது வார்டு சித்திராஜன், 23வது வார்டு பாபா மோகன், 24வது
வார்டு செந்தில்குமார், 25வது வார்டு ஜெகன், 26வது வார்டு விஜயா, 27வது
வார்டு சுந்தரம், 28வது வார்டு நாராயணன், 29வது வார்டு புவனேஸ்வரி, 30
வார்டு இன்பரசு, 31வது வார்டு கார்த்திகேயன், 32வது வார்டு ஆறுமுகம், 33வது
வார்டு மணிவண்ணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பல
வார்டுகளில் அப்பகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். சீட்
கேட்டும் கிடைக்காதவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.


