/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்புசிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்பு
சிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்பு
சிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்பு
சிறு, குறு விவசாயிகள் பற்றிய புள்ளி விவரங்கள் சேகரிப்பு
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் தாலுகா பகுதிகளில் சிறு, குறு விவசாயிகளின் அடிப்படை புள்ளி விவரங்கள் சேரிக்கும் பணி துவங்கியுள்ளதால் விவசாயிகள் ஒத்துழைப்பு தர வேளாண் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதில் விவசாயிகள் குறித்த முழு விவரங்கள், சர்வே எண், நிலத்தின் தன்மை, வேளாண் கருவிகள், கால்நடைகள் பற்றிய விவரம், வேளாண் தொழில் பற்றி விவரங்கள் ஆகியன ஒவ்வொரு விவசாயிகளிடமிருந்து அச்சிடப்பட்ட படிவங்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் 3 ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்துவது, மண் தரம் அறிந்து அதற்கேற்ப உயிர் உரங்கள், ரசாயன உரங்கள் தட்டுபாடில்லாமல் மானியத்துடன் வழங்குவது போன்ற நடவடிக்கை அரசு எடுக்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் அந்தந்த பகுதி வேளாண்மை அலுவலரிடம் தங்களை பற்றிய அடிப்படை புள்ளி விவரங்களை புகைப்படத்துடன் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண் உதவி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.