/உள்ளூர் செய்திகள்/தேனி/மாட்டுப்பட்டியில் ஆக்கிரமிப்பால் சுற்றுச்சுழல் மாசுபடும் அவலம்மாட்டுப்பட்டியில் ஆக்கிரமிப்பால் சுற்றுச்சுழல் மாசுபடும் அவலம்
மாட்டுப்பட்டியில் ஆக்கிரமிப்பால் சுற்றுச்சுழல் மாசுபடும் அவலம்
மாட்டுப்பட்டியில் ஆக்கிரமிப்பால் சுற்றுச்சுழல் மாசுபடும் அவலம்
மாட்டுப்பட்டியில் ஆக்கிரமிப்பால் சுற்றுச்சுழல் மாசுபடும் அவலம்
ADDED : செப் 24, 2011 10:10 PM
மூணாறு : மாட்டுப்பட்டி 'எக்கோ பாய்ண்ட்' பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளாலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் சுற்றுபுற சூழல் மாசு ஏற்பட்டு சுற்றுலா அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாட்டுப்பட்டி அணையின் நீர் பிடிப்பு பகுதியான 'எக்கோ பாய்ண்ட்' மூணாறில் இருந்து 15 கி.மீ.,தொலைவில் உள்ளது.இயற்கை எழிலுடன் காணப்படும் இப்பகுதியில் ஒலி எழுப்பினால் அலை,அலையாக எதிரொலிப்பதை கேட்டு ரசிக்கவும், பெடல் படகில் பயணிக்கவும் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வழியோரங்களும், நீர்பிடிப்பு பகுதிகளும் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. படகு துறையில் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளால் பயணிகள் படகு சவாரிக்கு நடந்து செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பிளாஸ்டிக் குவியல்:தேவிகுளம் ஊராட்சியில் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களான மாட்டுப்பட்டி அணை, எக்கோ பாய்ண்ட்,குண்டளை அணை போன்ற பகுதிகளில் பிளாஸ்டிக் பை, டம்ளர்,தட்டு உள்ளிட்ட பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் கடந்த ஜூன் 25 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை யாரும் பின்பற்றுவது இல்லை.
சுற்றுலா பயணிகளும்,வழியோர கடைக்காரர்களும் பிளாஸ்டிக் பொருட்களை தாராளமாக பயன்படுத்துகின்றனர். அப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் சுற்றுபுற சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.
காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகளின் உயிருக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என அஞ்சப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை செயல்படுத்தவும், கழிவுகளை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.


