Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மோகனூர் யூனியனில்245 பதவிக்கு 951 பேர் மனுசூடு பறக்கும் உள்ளாட்சி தேர்தல்

மோகனூர் யூனியனில்245 பதவிக்கு 951 பேர் மனுசூடு பறக்கும் உள்ளாட்சி தேர்தல்

மோகனூர் யூனியனில்245 பதவிக்கு 951 பேர் மனுசூடு பறக்கும் உள்ளாட்சி தேர்தல்

மோகனூர் யூனியனில்245 பதவிக்கு 951 பேர் மனுசூடு பறக்கும் உள்ளாட்சி தேர்தல்

ADDED : அக் 02, 2011 12:35 AM


Google News
மோகனூர்: மோகனூர் யூனியனில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் என மொத்தம், 245 பதவிக்கு, 951 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.மோகனூர் யூனியனில், 25 பஞ்சாயத்து தலைவர், 204 வார்டு உறுப்பினர், 15 யூனியன் கவுன்சிலர், ஒரு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் என மொத்தம், 245 பதவிக்கு அக்டோபர் 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

அதில் போட்டியிடுவதற்காக, கடந்த 22ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கியது.வேட்பு மனு தாக்கல் செய்வது, நேற்று முன்தினம் கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து, அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க., காங்., சுயேட்சைகள் என பலரும் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். கடைசி நாளான நேற்று முன்தினம், முக்கிய கட்சியான அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க., காங்., கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க., சார்பில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தொகுதி செயலாளர் மயில் சுந்தரம், தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று தேர்தல் அலுவலர் அருளரசுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.தி.மு.க., சார்பில், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒன்றியச் செயலாளர் வக்கீல் கைலாசம், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக சென்று தேர்தல் அலுவலர் அருளரசுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.மோகனூர் யூனியனில் உள்ள ஒரு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு, 13 பேர், 15 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு, 99 பேர், 25 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 128 பேர், 204 வார்டு உறுப்பினர் பதவிக்கு, 711 பேர் என மொத்தம், 245 பதவிக்கு 951 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us