ADDED : ஜூலை 29, 2011 11:43 PM
முசிறி: முசிறி அருகே சந்தபாளையம் கிராமத்தில் சரவணா மழலை மற்றும் தொடக்கப்பள்ளியில் இலவச சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது.முகாமிற்கு ஆசிரியை கல்பனா வரவேற்றார்.
பள்ளியின் தாளாளர் சரவணன் தலைமை வகித்தார். பல் மருத்துவர்கள் டாக்டர் ராஜராஜேஸ்குமார் தலைமையில் டாக்டர்கள் அருண், நவீன் ஆகியோர் பள்ளி மாணவ, மா ணவியருக்கும், பெற்றோர்களுக்கும் இலவசமாக பல் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை, சிகிச்சை அளித்தனர்.