/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வணிக நிறுவன மழைநீர் ஓடையில் இலகுரக மூடி அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்புவணிக நிறுவன மழைநீர் ஓடையில் இலகுரக மூடி அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வணிக நிறுவன மழைநீர் ஓடையில் இலகுரக மூடி அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வணிக நிறுவன மழைநீர் ஓடையில் இலகுரக மூடி அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வணிக நிறுவன மழைநீர் ஓடையில் இலகுரக மூடி அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
ADDED : செப் 22, 2011 12:51 AM
திருநெல்வேலி : நெல்லையில் வணிக நிறுவனங்களின் முன் பகுதியில் மழைநீர்
ஓடையில் வடிகால் ஓடையில் இலகுரக மூடி அமைக்காவிட்டால் குடிநீர் இணைப்பு,
பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர்
இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கமிஷனர் அஜய் யாதவ்
விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல்லை மாநகரின்
வணிகப்பகுதிகளில் சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால்கள் எவ்வித திறப்புமின்றி
முழுவதும் சிமெண்ட் பூச்சுகளால் பூசப்பட்டுள்ளதால் வடிகால்களை சுத்தம்
செய்ய இயலாத நிலை இருந்தது. இதனால் மழைநீர் வடிய இயலாமல் தேங்கி சாலைகள்
சேதமடைந்து, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே வடிகால்களை சுத்தம்
செய்யும் பொருட்டு, அனைத்து வணிக நிறுவன சங்க பிரதிநிதிகளுடன் கமிஷனர்
கூட்டம் நடத்தி ஒவ்வொரு 10 அடிக்கும் இடையில் இடைவெளி ஏற்படுத்தி எப்போது
வேண்டுமானாலும் மழைநீர் வடிகாலை சுத்தம் செய்யும் வகையில் இலகுரக மூடி
போட்டு வைக்க அறிவுறுத்தப்பட்டது. வணிக சங்க பிரதிநிதிகள் வரும் 23ம்
தேதிக்குள் மூடி போடும் பணியை முடித்துவிடுவதாக ஆணையரிடம் உறுதியளித்தனர்.
ஆனால் வணிகர்கள் தங்கள் நிறுவனங்களின் முன்பு வடிகால் ஓடையில் மூடிபோடும்
பணியை செய்யவில்லை. மேலும் மாநகராட்சி இடத்தையும் ஆக்ரமிப்பு செய்துள்ளனர்.
எனவே நெல்லை மாநகரின் வணிகப்பகுதிகளில் சாலையோரம் உள்ள வடிகால்களை சுத்தம்
செய்யும் பொருட்டு, ஒவ்வொரு 10 அடிக்ம் இடையில் இடைவெளி ஏற்படுத்தி இலகுரக
மூடி போட்டு வைக்கவேண்டும் என வணிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்ய தவறினால் மேற்படி வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு,
பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதோடு விதிகளின் படி கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். மேலும் மாநகராட்சி இடத்தை ஆக்ரமிப்பு செய்திருந்தாலும்
அவற்றை உடனடியாக அகற்றவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.