Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறுமி வழக்கு: ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் உட்பட 3 பேரின் முன் ஜாமின் தள்ளுபடி

சிறுமி வழக்கு: ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் உட்பட 3 பேரின் முன் ஜாமின் தள்ளுபடி

சிறுமி வழக்கு: ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் உட்பட 3 பேரின் முன் ஜாமின் தள்ளுபடி

சிறுமி வழக்கு: ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் உட்பட 3 பேரின் முன் ஜாமின் தள்ளுபடி

ADDED : ஆக 09, 2011 12:29 AM


Google News

ராமநாதபுரம் : மதுரை திருமங்கலம் சிறுமியை, விபசாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில், ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் உட்பட, மூவரின் முன் ஜாமின் மனுவை, மாவட்ட முதன்மை கோர்ட் தள்ளுபடி செய்தது.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிறுமி ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), விபசார கும்பலிடமிருந்து தப்பி, ராமநாதபுரம் மகளிர் போலீசில் தஞ்சமடைந்தார்.

இவரது புகார்படி, ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., தலைவர் ஜலீல் உட்பட, பலர் மீது வழக்கு பதிந்து, இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலரைத் தேடி வருகின்றனர். ஜலீல், ராமநாதபுரம் அர்ச்சுணன், பியூட்டி பார்லர் நடத்திவரும் ராமநாதபுரம் பாரதி நகர் ஹேமலதா ஆகியோர், ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கோர்ட்டில், முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இதேபோல், வழக்கில் கைது செய்யப்பட்ட, தொண்டு நிறுவன ஊழியர் ரைசுதீன் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணியன் உட்பட, ஊழியர்கள் நான்கு பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி பாலசந்திரகுமார், லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணியன், ஊழியர்கள் சரவணக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோரை விடுத்தும், பிறரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us