/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி விவசாயிகள் சபை வலியுறுத்தல்வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி விவசாயிகள் சபை வலியுறுத்தல்
வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி விவசாயிகள் சபை வலியுறுத்தல்
வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி விவசாயிகள் சபை வலியுறுத்தல்
வாய்க்கால் பராமரிப்புக்கு நிதி விவசாயிகள் சபை வலியுறுத்தல்
ADDED : ஆக 11, 2011 11:41 PM
ஈரோடு: 'வாய்க்கால் மற்றும் கொப்பு வாய்க்கால்களை பராமரிக்க, ஹெக்டேருக்கு 100 ரூபாய் நிதி வழங்க வேண்டும்' என, யு-9 கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் சபை கோரியுள்ளது.
நல்லாம்பட்டி நடந்த சபை கூட்டத்தில், வாய்க்கால் மற்றும் கொப்பு வாய்க்கால்களை பராமரிப்பு செய்ய 2006-07ம் ஆண்டை போல், ஆண்டுதோறும் ஹெக்டேருக்கு 100 ரூபாய் நிதி வழங்க வேண்டும். திருகு தடுப்பான்கள் பொருத்த வேண்டும். யு-9 பாசன சபைக்குட்பட்ட அனைத்து மதகுகளுக்கும் மதகு எண், பாசனப்பரப்பு, குழாய் அளவு, முறை போன்ற அனைத்து விபரங்களையும் எழுத வேண்டும். பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடங்களிலுள்ள மரங்களுக்கு எண் இட வேண்டும். நீர் எடுக்கும் அனைத்து பகுதியிலும் அளவுகோல் பொருத்த வேண்டும். பவானிசாகர் அணையில் நீர் திறக்கும் தேதியை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சபை தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். துணை தலைவர் ராமசாமி, பகிர்மான கமிட்டி தலைவர் செங்கோட்டையன், பொருளாளர் வாரணவாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.