/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருட்டை தடுத்த கூலித் தொழிலாளி கொலைதிருட்டை தடுத்த கூலித் தொழிலாளி கொலை
திருட்டை தடுத்த கூலித் தொழிலாளி கொலை
திருட்டை தடுத்த கூலித் தொழிலாளி கொலை
திருட்டை தடுத்த கூலித் தொழிலாளி கொலை
ADDED : ஆக 03, 2011 01:23 AM
பொன்னேரி : விவசாய மின்மோட்டாரை திருடியபோது, தடுக்கச் சென்ற கூலித் தொழிலாளியை இரும்பு தடியால் அடித்து கொலை செய்த, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரிக்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மோகன், 45. கூலித் தொழிலாளி. இவரது மனைவி லலிதா. இவர் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். மகள்கள் ராதிகா, 17, நவீனா, 16 மற்றும் தாய் முனியம்மா ஆகியோருடன், அவர் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில்,நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு மோகன் பாத்ரூம் செல்வதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் சரவணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய மோட்டார் ஷெட் உள்ளது. அங்கு மர்ம நபர்கள் மோட்டார் மற்றும் மின்ஒயர்களை திருடிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார். அதை கவனித்த மோகன் சத்தம் போட்டார். மர்ம நபர்கள் கையிலிருந்த இரும்பு தடியால் மோகனை பலமாக தாக்கி, கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினர். மோகனின் சத்தம் கேட்டு அவரது மகள்கள் மற்றும் தாயார் வெளியில் வந்து பார்த்தனர். அங்கு மோகன் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த, பொன்னேரி இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மோப்ப நாய் மேரி அருகிலிருந்த விவசாய மோட்டார் ஷெட்டுகளுக்கு சென்று திரும்பியது. மோகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, கொலையுண்டு இறந்த மோகனின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.