/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அ.தி.மு.க.,வினர் நூறு சதம் வெற்றி பெற வேண்டும் :அமைச்சர் வேலுமணி "அட்வைஸ்'அ.தி.மு.க.,வினர் நூறு சதம் வெற்றி பெற வேண்டும் :அமைச்சர் வேலுமணி "அட்வைஸ்'
அ.தி.மு.க.,வினர் நூறு சதம் வெற்றி பெற வேண்டும் :அமைச்சர் வேலுமணி "அட்வைஸ்'
அ.தி.மு.க.,வினர் நூறு சதம் வெற்றி பெற வேண்டும் :அமைச்சர் வேலுமணி "அட்வைஸ்'
அ.தி.மு.க.,வினர் நூறு சதம் வெற்றி பெற வேண்டும் :அமைச்சர் வேலுமணி "அட்வைஸ்'
ADDED : செப் 29, 2011 10:16 PM
பொள்ளாச்சி : 'அ.தி.மு.க., வேட்பாளர்கள் நூறு சதவீதம் வெற்றி பெற வேண்டும்' என, அமைச்சர் வேலுமணி கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார்.
பொள்ளாச்சி நகராட்சி தலைமை தேர்தல் அலுவலகம் கோவை ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் வேலுமணி, எம்.எல்.ஏ., ஜெயராமன் ஆகியோர் திறந்து வைத்தனர். பொள்ளாச்சி எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி, எம்.பி., சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொண்டர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, 'கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க.,வின் கோட்டை என்பதை உள்ளாட்சி தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும். அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் நூறு சதவீதம் வெற்றி பெற வேண்டும். முதல்வர் ஜெ., அறிவித்து செயல்படுத்தும் திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்று ஓட்டு சேகரிக்க வேண்டும். கட்சிக்குள் எந்த பிரச்னைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட வேண்டும். பொள்ளாச்சியில் வேட்பாளராக ஜெ., போட்டியிடுகிறார் என்று நினைத்து பணியாற்ற வேண்டும்' என்றார். எம்.எல்.ஏ., ஜெயராமன் பேசும்போது, 'பொள்ளாச்சி நகராட்சியில் புதிய பஸ் ஸ்டாண்ட், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிநீர் திட்டம் போன்றவை அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. மக்களின் நலனுக்காக சிந்தித்து செயல்படும் ஜெ., பொள்ளாச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பார். நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடத்தை அரசு மருத்துவமனைக்கு பெற்று, நவீன மருத்துவ வசதிகளுடன் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்கப்படும்' என்றார்.செண்டிமென்ட் இடம்: பொள்ளாச்சி அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு முறை சட்டசபை தேர்தலுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் கோவை ரோட்டில் உள்ள தனியார் இடத்தில் செட் அமைத்து தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது. நகராட்சி தேர்தலுக்கும் அதே இடத்தில் செட் அமைத்து தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை அ.தி.மு.க.,வினர் செண்டிமென்ட் இடமாக கருதுகின்றனர்.