கோபாலசமுத்திரம் குளம் ஆக்கிரமிப்பு
கோபாலசமுத்திரம் குளம் ஆக்கிரமிப்பு
கோபாலசமுத்திரம் குளம் ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 09, 2011 01:19 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் நகரின் நீர் ஆதாரமான கோபாலசமுத்திரம் குளத்தை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.
திண்டுக்கல் சமூக விஞ்ஞான ஆய்வு மைய தலைவர் ஜி.சந்திரன், கலெக்டர் நாகராஜனிடம் அளித்துள்ள மனு: வரலாற்று சிறப்பு மிக்க இக்குளம், பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. கழிவுகளை குளத்தில் கொட்டி சுகாதாரக்கேடு ஏற்படுத்துகின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி, நீர் நிலையை பாதுகாக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட், 2007 ல் உத்தரவிட்டது. நான்கு ஆண்டுகளாகியும் இன்னும், தீர்ப்பை அமல்படுத்தவில்லை. கடந்த ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்புக்கு ஆதரவாக செயல்பட்டதால், எந்த கலெக்டரும் முடிவு எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பை அகற்றி நீர்நிலையை காக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.


