Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாரடைப்பால் பயணி மரணம் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

மாரடைப்பால் பயணி மரணம் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

மாரடைப்பால் பயணி மரணம் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

மாரடைப்பால் பயணி மரணம் திருச்சி ஏர்போர்ட்டில் பரபரப்பு

ADDED : ஆக 09, 2011 01:16 AM


Google News
திருச்சி: துபாயிலிருந்து விமானம் மூலம் வந்த வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் மாரடைப்பால் திருச்சி விமான நிலையத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், ஆவூர், மெயின்ரோட்டைச் சேர்ந்த சையதுமுகமது மகன் நாசர் (48). இவர், கடந்த 20 ஆண்டாக துபாயில் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அல்மாஸ் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆண்டுதோறும் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து செல்வார். நடப்பாண்டு அவருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.இதையடுத்து அவர் 'ஏர்-இந்தியா' எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று அதிகாலை இரண்டு மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தார். சோதனைகளை முடித்துக் கொண்டு, ஏரோ-பிரிட்ஜ் வழியாக நடந்து வந்தார். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடன் வந்தவர்கள் அவரை இருக்கையில் அமர வைத்தனர். சிறிது நேரத்தில் பேச்சு மூச்சின்றி காணப்பட்டார்.

விமான நிலைய டாக்டர் கருணாகரன் அவரை பரிசோதித்து பார்த்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரித்தார்.நாசரை வரவேற்க வந்த உறவினர்கள் மூலம், அவரது உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், நாசர் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விமானநிலையம் மேலாளர் கோபாலகிருஷ்ணன் புகாரின் பேரில், விமானநிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us