/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/கருணாநிதி பிறந்தநாளுக்காக பட்டிமன்றம்: மாஜிக்கள் பங்கேற்புகருணாநிதி பிறந்தநாளுக்காக பட்டிமன்றம்: மாஜிக்கள் பங்கேற்பு
கருணாநிதி பிறந்தநாளுக்காக பட்டிமன்றம்: மாஜிக்கள் பங்கேற்பு
கருணாநிதி பிறந்தநாளுக்காக பட்டிமன்றம்: மாஜிக்கள் பங்கேற்பு
கருணாநிதி பிறந்தநாளுக்காக பட்டிமன்றம்: மாஜிக்கள் பங்கேற்பு
ADDED : ஆக 09, 2011 02:11 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச் சங்கம் சார்பில் கருணாநிதி
பிறந்தநாள் விழா நடந்தது. திலகர் திடலில் நடந்த விழாவுக்கு தமிழ்ச்சங்க
செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்டச் செயலாளர்
பெரியண்ணன் அரசு முன்னிலை வகித்தார். கவுன்சிலர் லியாகத் அலி வரவேற்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ., கவிதைப்பித்தன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்
முத்துசாமி, நகர்மன்ற துணைத் தலைவர் நைனாமுகம்மது உட்பட பலர்
கலந்துகொண்டனர்.
விழாவை முன்னிட்டு 'கலைஞரின் நிலைத்த புகழுக்கு பெரிதும் காரணாமயிருப்பது
சாதனையா ?, சோதனையா ?' என்ற தலைப்புகளில் பட்டிமன்றம் நடந்தது. முன்னாள்
அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். சாதனையே என்ற தலைப்பில் முன்னாள்
அமைச்சர்கள் ரகுபதி, ரகுமான்கான் மற்றும் மகேஸ்வரி சற்குரு ஆகியோர்
வாதிட்டனர். சோதனையே என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகள் செல்வேந்திரன்,
தாமரைச் செல்வன், விஜயா ஆகியோர் வாதிட்டனர்.


