/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சத்திரப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறைசத்திரப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
சத்திரப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
சத்திரப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
சத்திரப்பட்டி அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை
ADDED : செப் 23, 2011 01:05 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியர், தமிழ் மற்றும் கணக்கு ஆசிரியர்கள் இல்லை.
பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி குறையும் வாய்ப்பு உள்ளது. சத்திரப்பட்டியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அரசு பொதுதேர்வுகளில் 90 சதவீதம் தேர்ச்சி பெறுவார்கள். இங்கு தலைமை ஆசிரியர் நாராயணசாமி ஓய்வு பெற்றதால், அந்த இடம் காலியாக உள்ளது. தமிழாசிரியர் ஓய்வு, கணக்கு ஆசிரியர் இடம் காலி என பற்றாக்குறை இருந்தது. பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங்கில், காலி இடம் நிரப்பப்படும் என மாணவர்களின் பெற்றோர் எதிர்பார்த்தனர். அது நடக்கவில்லை. மாறாக, இங்கு கணக்கு ஆசிரியையாக இருந்த அம்பிகா மாறுதல் ஆனார். தற்போது தலைமை ஆசிரியர், தமிழாசிரியர், இரு கணக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பெண்கள் பள்ளி ஆசிரியர் அண்ணாத்துரை மாற்று பணியாக பாடம் நடத்துகிறார். பள்ளிகளில் காலாண்டு தேர்வு துவங்கி விட்டது. ஏழு மாதங்களில் அரசு பொதுத்தேர்வை பத்தாம் வகுப்பு மாணவர்கள் சந்திக்க உள்ளனர். வசதி இல்லாத மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்கின்றனர். டியூசனுக்கு வழி இல்லாமல், பள்ளி ஆசிரியர்களை நம்பியே உள்ளனர். ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும். கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்.