/உள்ளூர் செய்திகள்/மதுரை/துவரிமானில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்துவரிமானில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
துவரிமானில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
துவரிமானில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
துவரிமானில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
ADDED : ஆக 01, 2011 02:06 AM
துவரிமான்:சோழவந்தான் அருகே துவரிமானில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனுக்களை பெற்றார்.
துவரிமான், கொடிமங்கலம், தாராப்பட்டி, கீழமாத்தூர், தேனூர் பகுதி ரேஷன்
கடைகளில் அமைச்சர் செல்லூர்ராஜூ ஆய்வு செய்தார். அங்கு கூடிய மக்கள்
கூடுதல் மண்ணெண்ணெய், Œர்க்கரை மற்றும் முதியோர் பென்ஷன் வழங்க கோரினர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
துவரிமானில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் மக்களிடம் மனுக்களை அவர் பெற்று
கொண்டார். பின், அமைச்சர் கூறுகையில், ''முதியோர் பென்ஷன் கிடைக்க,
கூட்டுகுடிநீர் திட்டம் நிறைவேற்ற, துவரிமான் கண்மாய் கரைகளை பலப்படுத்தி
தூர்வார, நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார். ஊராட்சி தலைவர் கண்ணன்,
ஊராட்சி உதவியாளர் முருகன், அ.தி.மு.க., கிளை செயலாளர்கள் நாகேந்திரன்,
முத்து, கருப்பணன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தர்மராஜ், மாவட்ட
ஊராட்சிகளின் உதவிஇயக்குனர் ரம்யாதேவி உடன் சென்றனர்.


