Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/தூத்துக்குடி துறைமுகம் வழியாகசெந்தூர கட்டைகள் கடத்த முயற்சி

தூத்துக்குடி துறைமுகம் வழியாகசெந்தூர கட்டைகள் கடத்த முயற்சி

தூத்துக்குடி துறைமுகம் வழியாகசெந்தூர கட்டைகள் கடத்த முயற்சி

தூத்துக்குடி துறைமுகம் வழியாகசெந்தூர கட்டைகள் கடத்த முயற்சி

ADDED : ஜூலை 30, 2011 01:05 AM


Google News
தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகம் வழியாக கடத்த இருந்த செந்தூர கட்டைகளை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி துறைமுகம் வழியாக கண்டெய்னர் பெட்டியில் ரூபாய்.1.12 கோடி மதிப்புள்ள செந்தூர கட்டைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தூத்துக்குடிக்கு லாரிகளில் வரும் கண்டெய்னர் பெட்டிகளை டோல்கேட் அருகில் நிறுத்திசோதனையிட்டனர். அப்போது அங்கு வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். இரண்டு லாரிகளிலும் சிஆர்எக்யு 114351 என்ற ஒரே நம்பருடைய கண்டெய்னர் பெட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியில் வந்தவர்களிடம் இதுகுறித்துவிசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குபிரணாக தகவல் கொடுத்தையடுத்து கண்டெய்னர்களை திறந்துபார்க்க முடிவு செய்தனர். உடனடியாக இரண்டு கண்டெய்னர் பெட்டிகளும் திறந்து சோதனையிடப்பட்டது.இதில் ஒரு கண்டெய்னர் பெட்டியில் கிராணைட் கற்களை வைத்து கற்களுக்கு பின்னால் செந்தூர கட்டைகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் படி செந்தூர கட்டைகள் ஏற்றுமதி செய்வது தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யும் போது மாட்டிக்கொள்வோம் என்று எண்ணி கிரானைட் கல் ஏற்றுமதி என்ற பெயரில் ஏற்றுமதி செய்யஇருப்பது தெரிய வந்தது. உடனடியாக இரண்டு லாரிகளும் லாரிகளில் இருந்த கண்டெய்னர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.தடைசெய்யப்பட்ட செந்தூர கட்டைகளை கடத்த முயற்சிசெய்ததற்காக செபாஸ்டீன்(33), தமிழ்அரசன்(32), ரபிஃக் பாஷா(32) ஆகிய மூன்றுபேர் கைதுசெய்யப்பட்டனர். இதுதொடர்பாக சென்னை யை சேர்ந்த சிட்டிராஜா, மற்றும் ரவி ஆகியோரை தேடி வருகின்றனர். உலகத்தி லேயே இந்தியாவில் மட்டும் செந்தூர மரம் வளர்க்கப் படுகிறது. வெளிநாடுகளில் செந்தூர கட்டைகளுக்கு தனி கிராக்கிஉண்டு. இந்தியாவில் ஆந்திராவில் உள்ள சிட்டூர், நெல்லூர் ஆகிய மாவட்டங்க ளில் அதிகளவில் வளர்க்கப் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us