/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வைப்பார் பஞ்.,சில் கிராமசபைக் கூட்டம்வைப்பார் பஞ்.,சில் கிராமசபைக் கூட்டம்
வைப்பார் பஞ்.,சில் கிராமசபைக் கூட்டம்
வைப்பார் பஞ்.,சில் கிராமசபைக் கூட்டம்
வைப்பார் பஞ்.,சில் கிராமசபைக் கூட்டம்
ADDED : ஆக 22, 2011 11:31 PM
விளாத்திகுளம் : வைப்பார் பஞ்.,சில் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் நடந்தது.
விளாத்திகுளம் யூனியன் வைப்பார் பஞ்.,சில் சுதந்திர தினவிழா கிராமசபைக் கூட்டம் பஞ்.,தலைவர் செண்பகபெருமாள் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், முழு சுகாதார திட்டம் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பஸ் வசதி, குடிநீர்வசதி, பழுதடைந்த மின்கம்பங்களை சரி செய்ய வேண்டியும், சமுதாய நலக்கூடம் கட்ட வேண்டியும் மனு கொடுத்தனர். கிராம சபைக் கூட்டத்தில் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், வைப்பார் வி.ஏ.ஓ.,காலின்ஸ், பஞ்.,உதவியாளர் பெருமாள்சாமி, மக்கள் நலப்பணியாளர் பொம்முதுரை, வார்டு உறுப்பினர்கள், துலுக்கன்குளம் பேரறிஞர் அம்பேத்கார் இளைஞர் குழு மற்றும் கக்கன்ஜி குழந்தைகள், பாராளுமன்ற குழந்தைகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


