ADDED : செப் 23, 2011 11:28 PM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கரையூர் அருகே பூலித்தேவன் நகரை சேர்ந்தவர்
பஞ்சவர்ணம், 65.
இவரது வீட்டில் கடலாடி அருகேயுள்ள பொரசங்குளத்தை சேர்ந்த
ராமர்(25), மனைவி அடைக்கலகுரு ஆகியோர் வாடகைக்கு குடியிருந்து வந்தனர்.
ராமேஸ்வரத்தில் மீன்பிடிக்கூலி வேலை செய்து வரும் ராமர், குடிபோதையில்
மனைவியுடன் தகராறு செய்தார். அப்போது அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து
மனைவி அடைக்கலகுருவை அடித்தபோது, தடுக்க வந்த பஞ்சவர்ணம் தலையில் அடிபட்டு
பலியானார். ராமரை, ராமேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.