/உள்ளூர் செய்திகள்/திருச்சி/"வாக்காளரின் உரிமை' குறும்படம் ஒளிபரப்பு"வாக்காளரின் உரிமை' குறும்படம் ஒளிபரப்பு
"வாக்காளரின் உரிமை' குறும்படம் ஒளிபரப்பு
"வாக்காளரின் உரிமை' குறும்படம் ஒளிபரப்பு
"வாக்காளரின் உரிமை' குறும்படம் ஒளிபரப்பு
ADDED : அக் 10, 2011 02:56 AM
திருச்சி: திருச்சி வாக்காளர்களிடையே ஓட்டுப்பதிவின் அவசியம், வாக்காளர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறை மூலம் 'வாக்களிப்பதன் அவசியம்' என்ற தலைப்பில் குறும்படம் ஒளிபரப்படுகிறது.உறையூர், வாட்டர்டேங், எஸ்.எம்.இ.எஸ்., மேல்நிலை ப்பள்ளி மைதானம், வெக்காளியம்மன் கோவில் அ ருகே நாடார் தெரு பகுதி, பாண்டமங்கலம், அண்டகொண்டான் ஆகிய பகுதிகளில் ஒளிபரப்பப்பட்டது.
தேர்தல் புகார் எண்கள் மீண்டும் வெளியீடு: இடைத்தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை உள்பட 14 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 3 பார்வையாளர்நியமிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் சில நாளே உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் ஏதேனும் இருந்தால் மக்கள் பார்வையாளர்களுக்கு புகார் தெரிவிக்கலாம். பார்வையாளர்கள் பராசிவமூர்த்தி (போலீஸ்) 0431-2462344, 94887-60656, ஆர்.கே.,பதக் (பொது) 0431-2400262, 94892-73078, நிவேதிதா பிஸ்வாஸ் (செலவினம்) 0431-2400547, 94891-73078 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.


