/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு
"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு
"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு
"நான் தான் கலெக்டர்' பட்டதாரி வாலிபர் ஏற்படுத்திய பரபரப்பு
தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., இருக்கையில் அமர்ந்து 'நான் தான் கலெக்டர்' என கூறி வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிர்ச்சி அடைந்த டி.ஆர்.ஓ., அந்த வாலிபரிடம் விசாரித்த போது, ''நான் தான் கலெக்டர் நீங்கள் யார்,'' என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து அந்த வாலிபரை அறையில் இருந்து அகற்றினர். விசாரணையில், அந்த வாலிபர் தர்மபுரியை அடுத்த உழவன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி (33) என்பதும், பட்டதாரி வாலிபரான அவர் குரூப் தேர்வுகள் எழுதியிருப்பதாகவும், கலெக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருப்பதாகவும், அதில் அவருக்கு மன நிலை பாதிக்கப்பட்டு டி.ஆர்.ஓ., அறைக்குள் புகுந்து அவரது இருக்கையில் அமர்ந்ததாக தெரிகிறது. போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.