/உள்ளூர் செய்திகள்/திருச்சி/புதிய எடையளவு சட்ட அமலாக்க பயிற்சி வகுப்பு :திருச்சியில் தொழிலாளர் துறை ஏற்பாடுபுதிய எடையளவு சட்ட அமலாக்க பயிற்சி வகுப்பு :திருச்சியில் தொழிலாளர் துறை ஏற்பாடு
புதிய எடையளவு சட்ட அமலாக்க பயிற்சி வகுப்பு :திருச்சியில் தொழிலாளர் துறை ஏற்பாடு
புதிய எடையளவு சட்ட அமலாக்க பயிற்சி வகுப்பு :திருச்சியில் தொழிலாளர் துறை ஏற்பாடு
புதிய எடையளவு சட்ட அமலாக்க பயிற்சி வகுப்பு :திருச்சியில் தொழிலாளர் துறை ஏற்பாடு
ADDED : ஜூலை 21, 2011 02:43 AM
திருச்சி: திருச்சியில் தொழிலாளர் துறை சார்பில் புதிய எடையளவு சட்ட அமலாக்கம் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.
புதிய சட்டமுறைகள் எடையளவு சட்டம் 2009 மற்றும் எடையளவு பொட்டலப் பொருட்கள் விதிகள் 2011, சட்டமுறை எடையளவு அமலாக்க விதிகள்-2011 ஆகியவை நாடு முழுவதும் 2011 ஏப்., 1 முதல் கடைபிடிக்கப்படுகின்றன.
இந்த சட்டங்களை அமல்படுத்துவது பற்றி சட்ட அமலாக்க அதிகாரிகள், ஆய்வாளர்களுக்கான பயிற்சி முகாம் திருச்சியில் நடந்தது. முகாமில் திருச்சி கூடுதல் தொழிலாளர் கமிஷனர் தாயுமானவர் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்திய சட்டமுறை எடையளவு இயக்குனரக முன்னாள் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: புதிய சட்டமுறை எடையளவு சட்டத்தின் படி பெட்ரோல் பங்க், டேங்கர் லாரி, எடைபாலம், எலக்ட்ரானிக் தராசு, மேடைத்தராசு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒருமுறை எடையளவு ஆய்வாளர்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இதர எடை அளவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதற்கு புதிய கட்டண விகிதங்கள் அமலில் உள்ளன. உரிய காலத்தில் மறு முத்திரையிடாத எடை அளவுகளை பறிமுதல் செய்து, அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும். லைசென்ஸ் பெற்றவர்கள் தான் எடையளவுகளை உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, பழுது பார்க்க வேண்டும். அந்த லைசென்சுகளை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். பொட்டலமிடும் அனைத்து இனங்களையும் லைசென்ஸ் பெற்றவர்கள் தான் தயாரிக்கவோ, பொட்டலமிடவோ வேண்டும். இதற்கு ஒருமுறை லைசென்ஸ் பெற்றால் போதும், பொட்டலங்களில் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர் முழு முகவரி, பொருளின் பெயர், நிகர எடை, தயாரிக்கப்பட்ட, பொட்டலமிட்ட மாதம், ஆண்டு, அதிக பட்ச சில்லரை விற்பனை விலை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். இவற்றை கடைபிடிக்காதவர்களுக்கும், உரிமம் பெறாதவர்களுக்கும், நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட பொட்டலங்களை பறிமுதல் செய்வதுடன், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும். எடையளவுகளை தயாரிப்போர் தங்களின் மாதிரி எடையளவுகளுக்கு அரசு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த முறையில் உள்ள எடையளவுகளைத்தான் வியாபாரிகள் பயன்படுத்த வேண்டும். இவற்றை உரிய காலக்கெடுவிற்குள் முத்திரையிடுவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்கள், சட்டமுறை எடையளவு ஆய்வாளர்கள் பயிற்சி பெற்றனர். தொழிலாளர் இணை கமிஷனர்கள் குமரன் (திருச்சி), சம்சுதீன் (திண்டுக்கல்), துணை கமிஷனர்கள் மகாராஜன், இலியாஸ், திருச்சி தொழிலாளர் அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனர் சுந்தரராஜ் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், திண்டுக்கல், கரூர், தேனி மாவட்டங்களின் உதவி கமிஷனர்கள் பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர்.


