/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/நான்கு வழிச்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை: கலெக்டர்நான்கு வழிச்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை: கலெக்டர்
நான்கு வழிச்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை: கலெக்டர்
நான்கு வழிச்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை: கலெக்டர்
நான்கு வழிச்சாலையில் விபத்து எச்சரிக்கை பலகை: கலெக்டர்
ADDED : ஜூலை 13, 2011 02:48 AM
விருதுநகர் : விருதுநகர் நான்கு வழிச்சாலையில் விபத்து நடக்கும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க கலெக்டர் பாலாஜி உத்தரவிட்டார். விருதுநகரில் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில் அவர் பேசுகையில், ''கடந்த ஆண்டு விபத்து நடந்த இடங்களின் விபரங்களை அதிகாரிகள் சேகரிக்க வேண்டும். ரோட்டோர ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும். டூவீலரில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து போலீசார் பற்றாக்குறை உள்ள இடங்களில் என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்களை பயன்படுத்தி சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். மாணவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கு, ஊர்வலம் நடத்த வேண்டும். கல்லூரிகளில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு விபத்து காரணங்கள், தவிர்க்கும் வழி முறைகள் குறித்து ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டும்.
நான்கு வழிச்சாலை முக்கிய சந்திப்புகளில் வேகத்தடை, விளக்குகள் அமைக்க வேண்டும். விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும், ''என்றார். நஜ்மல் கோடா எஸ்.பி., ராமன் டி.ஆர்.ஓ., நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முனீஸ்வரன், சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், வட்டார போக்கு வரத்து அலுவலர் செல்வக்குமார் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


