Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஊராட்சி தலைவர் அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவு : ஐகோர்ட் கிளை தடை

ஊராட்சி தலைவர் அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவு : ஐகோர்ட் கிளை தடை

ஊராட்சி தலைவர் அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவு : ஐகோர்ட் கிளை தடை

ஊராட்சி தலைவர் அதிகாரத்தை பறித்து கலெக்டர் உத்தரவு : ஐகோர்ட் கிளை தடை

ADDED : ஜூலை 24, 2011 11:49 PM


Google News

மதுரை : மதுரை மாவட்டம் ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி தலைவர் முத்துமீனாவின் அதிகாரத்தை பறித்த கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது.

ஆண்டார்கொட்டாரம் ஊராட்சி தலைவர் முத்து மீனா தாக்கல் செய்த ரிட் மனு: 2006ல் ஊராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு பணிபுரிகிறேன். ஊராட்சிகளுக்கான துணை இயக்குனர், ஊராட்சியை சில வாரங்களுக்கு முன் ஆய்வு செய்தார். அப்போது சில முறைகேடுகள் இருப்பதாக கூறி, நோட்டீஸ் கொடுத்தார். எந்த முறைகேடுகளும் இல்லை என விளக்கம் அளித்தேன். கிழக்கு யூனியன் பி.டி.ஒ.,வும் விசாரித்து முறைகேடு இல்லை என அறிக்கை அளித்திருந்தார். இந்நிலையில் என் ஊராட்சி தலைவர் அதிகாரத்தை பறித்து கலெக்டர் ஜூலை 8ல் உத்தரவிட்டார். என் விளக்கத்தை அவர் பரிசீலிக்கவில்லை. அதிகாரத்தை பி.டி.ஒ.,வுக்கு வழங்கியும் உத்தரவிட்டார். இது எதேச்சாதிகாரம். கலெக்டர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விசாரணை முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் என்.சதீஷ்பாபு ஆஜரானார். நீதிபதி ஆர்.சுதாகர், மனு குறித்து பதிலளிக்க கலெக்டர், ஊராட்சிகளுக்கான துணை இயக்குனர் மற்றும் பி.டி.ஒ.,வுக்கு உத்தரவிட்டார். மேலும் ஊராட்சி தலைவர் அதிகாரத்தை பறித்த கலெக்டர் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us