/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/முன்னாள் ஜனாதிபதி கலாம் நெல்லைக்கு 5ம் தேதி வருகை : பாதுகாப்பு குறித்து ஆலோசனைமுன்னாள் ஜனாதிபதி கலாம் நெல்லைக்கு 5ம் தேதி வருகை : பாதுகாப்பு குறித்து ஆலோசனை
முன்னாள் ஜனாதிபதி கலாம் நெல்லைக்கு 5ம் தேதி வருகை : பாதுகாப்பு குறித்து ஆலோசனை
முன்னாள் ஜனாதிபதி கலாம் நெல்லைக்கு 5ம் தேதி வருகை : பாதுகாப்பு குறித்து ஆலோசனை
முன்னாள் ஜனாதிபதி கலாம் நெல்லைக்கு 5ம் தேதி வருகை : பாதுகாப்பு குறித்து ஆலோசனை
ADDED : ஆக 03, 2011 12:31 AM
திருநெல்வேலி : நெல்லைக்கு வரும் 5ம் தேதி முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வருகிறார்.
இதுதொடர்பாக பாதுகாப்பு, முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது. பாளை பெல் மெட்ரிக் பள்ளியில் 59வது தமிழக கண் டாக்டர்கள் சங்க மாநில மாநாடு வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 800 டாக்டர்கள் பங்கேற்கின்றனர். கண் மருத்துவம், கண் மருத்துவ ஆராய்ச்சி கலந்துரையாடல், கண் நோய் பற்றிய விளக்க படங்கள் மாநாட்டில் இடம் பெறுகினறன. சுமார் 100 கண் மருத்துவ சாதனங்களின் அரங்குகளும் அமைக்கப்படுகின்றன. நெல்லைக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் போலீஸ் கமிஷனர் வரதராஜூ, எஸ்.பி விஜயேந்திர பிதரி, துணை கமிஷனர்கள் மார்ஸ்டன் லியோ, ஜெயபால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சந்திரசேகரன், ஆர்.டி.ஓ ராஜகிருபாகரன், பி.ஆர்.ஓ இளங்கோ, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா முகைதீன், மாநாடு அமைப்பு செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின் வாரிய துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.