மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் 86 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் 86 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டில் 86 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு

காரைக்குடி : மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அவரது உறவினர்களுக்கு சொந்தமான பொது வீட்டில் ரூ.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் மோதிலால் தெருவில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அவரது உறவினர்களுக்கு சொந்தமான எல்.சி.டி. சிதம்பரம் விலாஸ் பங்களா உள்ளது. இங்கு யாரும் வசிக்காததால், மானேஜர் ஆத்மநாதன் வீட்டை பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம், வீட்டை திறந்து பார்த்தபோது கீழ் மற்றும் மேல்தளத்தில் உள்ள சில அறைகளின் ஜன்னல், கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடுபோனது தெரிய வந்தது. வராண்டாவிலும் பொருட்கள் சிதறி கிடந்தன. மானேஜர் புகாரின் பேரில், எஸ்.பி., பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வெளியூர்களில் வசித்து வந்த வீட்டுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் நேற்று காலை கண்டனூர் வந்தனர். அறைகளில் இருந்த பொருட்கள் குறித்து 'பட்டியலை' வாசித்தனர். இதில் ஒவ்வொரு அறையிலும், பல விலையுயர்ந்த வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. கும்கும சிமிழ் முதல் வெள்ளி அண்டா வரை 86 கிலோ மதிப்புள்ள வெள்ளி வீட்டு உபயோக பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 50 லட்சம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
டி.எஸ்.பி., மங்களேஸ்வரன் கூறுகையில், '' 30 ஆண்டுகளுக்கு முன்பு சீர்வரிசையாக வழங்கப்பட்ட வெள்ளி பொருட்கள் இங்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், மர்ம நபர்கள் 86 கிலோ வரை திருடியுள்ளது தெரியவந்துள்ளது. மூன்று பேரின் 'கைரேகை' சிக்கியுள்ளது. மூன்று பேர் கொண்ட கும்பல் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.'' என்றார்.