/உள்ளூர் செய்திகள்/கரூர்/"விடாமுயற்சியால் வெற்றி பெறலாம்' சர்க்கரை ஆலை அலுவலர் "அட்வைஸ்'"விடாமுயற்சியால் வெற்றி பெறலாம்' சர்க்கரை ஆலை அலுவலர் "அட்வைஸ்'
"விடாமுயற்சியால் வெற்றி பெறலாம்' சர்க்கரை ஆலை அலுவலர் "அட்வைஸ்'
"விடாமுயற்சியால் வெற்றி பெறலாம்' சர்க்கரை ஆலை அலுவலர் "அட்வைஸ்'
"விடாமுயற்சியால் வெற்றி பெறலாம்' சர்க்கரை ஆலை அலுவலர் "அட்வைஸ்'
ADDED : அக் 06, 2011 03:26 AM
வேலாயுதம்பாளையம்: ''தோல்வியை அனுபவ பாடமாக கொண்டு, தொடர்ந்து விடாமுயற்சி செய்தால் இலக்கை அடைய முடியும்,'' என சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர் மலர்விழி பேசினார்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சேலம் கூட்டுறவு ஆலை அலுவலர் மலர்விழி பங்கேற்றார். விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற வினோதினிக்கு அவர் பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:
நாம் எதை அடைய வேண்டும் என்பதை முதலில் இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும். பின்னர் அதனை அடைய பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும் துவண்டு விடாமல் ஒரு முறை, பல முறை தோல்வியடைந்தாலும் அதனையே அனுபவ பாடமாக கொண்டு நமது இலக்கினை அடைய விடா முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் முழுமையான இலக்கினை அடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், கல்லூரி தலைவர் மலையப்பசாமி, துணைத்தலைவர் டாக்டர் முத்துக்குமார், தாளாளர் கந்தசாமி, பொருளாளர் தங்கராஜ், முதல்வர் நடராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் புத்தர், சிவா, தலைமையாசிரியர் ஆறுமுகம், டி.என்.பி.எல்., பாதுகாப்பு அலுவலர் துரைராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


