ரேஷன் கடைகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ரேஷன் கடைகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ரேஷன் கடைகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஆக 11, 2011 11:41 PM
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி மற்றும் நகராட்சிப்பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை எனவும், பொருள் வாங்குவதில் தாமதம் ஏற்படுவதாக, கலெக்டருக்கு புகார்கள் வந்தன.
மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் தலைமையிலும், பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் (கூட்டுறவு) தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. இக்குழுவைச் சேர்ந்த பறக்கும்படையினர் மாநகராட்சி மற்றும் வீரப்பன்பாளையம், கருங்கல்பாளையம் என நகராட்சிப்பகுதியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ''ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருளின் எடை குறையாமலும், தாமதம் இன்றியும் வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் ஏதேனும் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, கலெக்டர் காமராஜ் எச்சரிக்கை விடுத்தார்.