எனக்கு என்ன குறைச்சல்? அசின் ஆவேசம்!
எனக்கு என்ன குறைச்சல்? அசின் ஆவேசம்!
எனக்கு என்ன குறைச்சல்? அசின் ஆவேசம்!
ADDED : செப் 03, 2011 02:30 PM

மலையாலக்கரையோரத்தில் இருந்து கோடம்பாக்கத்தில் கால்பதித்து பின்னர்
பாலிவுட்டுக்கு பாய்ந்து சென்ற நாயகி அசின் இதுவரை இந்தியில் 3 படங்களில்
மட்டுமே நடித்துள்ளார். அதிக அளவில் படம் இல்லாவிட்டாலும்,
அரபிக்கடலோரத்தில் இருந்து வர அடம்பிடிக்கும் அசின் படவாய்ப்பு குறித்து
அரசல்புரசலாக பாலிவுட் வட்டாரம் அவ்வப்போது கொக்கரிக்க, கொதித்து எழுந்த
அசின் சரவெடியாக வெடித்துள்ளார்.
நான் ஒரு நடிகையாகவும் சரி ஒரு தனிப்பட்ட பெண்ணாகவும் சரி எப்போதுமே
எதற்கும் பயந்தது இல்லை. நான் பாதுகாப்பாக இல்லையோ என உணர்ந்ததும் இல்லை.
எண்ணிக்கைக்காக படம் நடிப்பவள் நான் இல்லை. கண்ட கதையையும் கையில்
எடுத்துக் கொண்டு நடித்து விடமுடியாது. எனவே தான் செலக்டிவாக இருக்கிறேன்.
என்னோட வழியல் நான் சரியாக சென்று கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு
குறையும் இல்லை.அசினுக்கு மார்கெட் இல்லை என அநாவசியமாக அவதூறுகளை
பரப்புபவர்களை அடக்க முடியாது. அவர்களை பற்றி எனக்கு கவலையும் இல்லை என
கூறியுள்ளார்.
அசின் இதுவரை இந்தியின் கஜினி, லண்டன் ட்ரீம்ஸ், ரெடி ஆகிய 3 படங்களில் நடித்துள்ளார். தற்போது போல் பச்சன், ஹவுஸ்புல் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ஆடத் தெரியாதவள் தான் தெரு கோணலா இருக்குன்னு சாக்கு சொல்வாள்... என்னங்க அம்மணி சரி தானே!


