/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியை உறுதி செய்த சுயேட்சைகள்சேலம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியை உறுதி செய்த சுயேட்சைகள்
சேலம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியை உறுதி செய்த சுயேட்சைகள்
சேலம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியை உறுதி செய்த சுயேட்சைகள்
சேலம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியை உறுதி செய்த சுயேட்சைகள்
ADDED : அக் 05, 2011 02:24 AM
சேலம்:சேலம் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், பிரதான கட்சிகளுக்கு எதிராக,
போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கியவர்கள், வேட்பு மனு வாபஸ் பெறாமல்
தேர்தலில் களம் இறங்குவதை உறுதி செய்துள்ளனர். இதனால், பிரதான கட்சி
வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.சேலம் மாநகராட்சியில், அ.தி.மு.க.,-
தி.மு.க., உள்ளிட்ட பிரதான கட்சிகளில் சார்பில், தேர்தலில் போட்டியிட
வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அதிரடியாக வேட்பு மனு தாக்கல் செய்து, தங்கள்
சார்ந்த கட்சி வேட்பாளர்களுக்கு 'கிலி'யை ஏற்படுத்தினர்.சேலம்
மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிட, 909 பேர் வேட்பு மனுத்தாக்கல்
செய்தனர். இதில், 35 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 261 பேர் வேட்பு
மனுவை வாபஸ் பெற்றனர். வாபஸ் பெறப்பட்ட பெரும்பாலான மனுக்கள், மாற்று
வேட்பாளர்களுடையது. தள்ளுபடி, வாபஸுக்கு பின், 613 பேர், கவுன்சிலர்
தேர்தலுக்கான களத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, கவுன்சிலர்
தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களுக்குரிய சின்னங்களை, தேர்தல் உதவி
நடத்தும் அலுவலர்கள் வழங்கினர்.பிரதான கட்சியினர், கட்சியில் இருந்து விலகி
சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களை தடுத்து நிறுத்தும் முயற்சி
தோல்வியில் முடிந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், 'அதிருப்தி
வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்று கொள்ளுங்கள்' என்று அ.தி.முக.,
பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.ஆனால், சேலம் மாநகராட்சியில்,
அ.தி.மு.க., வினர் வரிந்து கட்டி கொண்டு சுயேட்சையாக களம் இறங்கி, கட்சி
தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளனர்.ஏற்கனவே, அரசியல் கட்சிகள்
தனித்தனியாக களம் இறங்குவதால், ஓட்டுக்கள் சிதறும் நிலை உள்ளது. இந்த
நிலையில், போட்டி வேட்பாளர்கள், களம் இறங்குவது உறுதியானதால், பல
வார்டுகளில், 'சீட்' கிடைத்தும், பிரதான கட்சி வேட்பாளர்கள் கலக்கத்தில்
உள்ளனர்.


