/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 1,699 பேர் போட்டிவடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 1,699 பேர் போட்டி
வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 1,699 பேர் போட்டி
வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 1,699 பேர் போட்டி
வடக்கு, தெற்கு ஒன்றியங்களில் 1,699 பேர் போட்டி
ADDED : அக் 05, 2011 02:16 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 1,026 பேரும், தெற்கு ஒன்றியத்தில், 673 பேரும் களத்திலுள்ளனர்.
வேட்பாளர்களுக்கு சின்னம் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் களம் விறு, விறுப்பாகியுள்ளது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 10 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், 3 பேர் 'வாபஸ்' பெற்ற நிலையில் 7 பேர் களத்திலுள்ளனர். 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 95 பேர் மனுத்தாக்கல் செய்ததில், 25 பேர் வாபஸ் பெற்றனர். இறுதி பட்டியலில், 69 பேர் களத்திலுள்ளனர். மொத்தமுள்ள 39 ஊராட்சிகளில் தலைவர் பதவிக்கு 217 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 81 பேர் வாபஸ் பெற்றனர். ஒரு ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர் மட்டுமே களத்திலுள்ளதால், போட்டியின்றி தலைவர் தேர்வாகியுள்ளார். மீதமுள்ள 38 ஊராட்சிகளில், 135 பேர் தலைவர் பதவிக்கான வேட்பாளர்களாக களத்திலுள்ளனர். ஊராட்சிகளுக்குட்பட்ட 303 ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு 968 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 14 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 954 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில், 108 பேர் வாபஸ் பெற்றனர். இறுதி பட்டியலில் 815 பேர் களத்திலுள்ளனர். மீதமுள்ள 31 ஊராட்சி வார்டுகளில் தலா ஒருவர் மட்டுமே களத்திலுள்ளதால் போட்டியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தெற்கு ஒன்றியத்தில், 2 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், ஒருவர் வாபஸ் பெற்றதையடுத்து, 10 பேர் களத்திலுள்ளனர். 13 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 70 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதில், 12 பேர் வாபஸ் பெற்றதால், 49 பேர் களத்திலுள்ளனர். மொத்தமுள்ள 26 ஊராட்சி தலைவர் பதவிக்கு 121 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 119 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இறுதியில், 32 பேர் வாபஸ் பெற்றதையடுத்து, 87 பேர் களத்திலுள்ளனர். 210 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 669 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதில், 24 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், 645 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியில், 98 பேர் வாபஸ் பெற்றதால், 527 பேர் களத்திலுள்ளனர். இந்த ஒன்றியத்தில், 20 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.களத்திலுள்ள வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


