/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தொண்டாமுத்தூரில் பயிற்சிஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தொண்டாமுத்தூரில் பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தொண்டாமுத்தூரில் பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தொண்டாமுத்தூரில் பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தொண்டாமுத்தூரில் பயிற்சி
ADDED : அக் 05, 2011 02:12 AM
பேரூர் : உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி
வகுப்பு, தொண்டாமுத்தூரில் நடந்தது.
தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்,
மாவட்ட ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி
பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினர் என, மொத்தம் 124 பதவிகளுக்கான
தேர்தல் வரும் 19ம் தேதி நடத்தப்படுகிறது. தேர்தல் பணிகளுக்காக நான்கு
பிரிவாக பிரிக்கப்பட்டு, தேர்தல் அலுவலர்கள் தனித்தனியாக
நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியாற்றும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான
பயிற்சி வகுப்புகள், தொண்டாமுத்தூரில் ராஜலட்சுமி கல்யாண மண்டபத்தில்
நடந்தது. இதில், ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் தேர்தலுக்கு,
ஓட்டுப்பெட்டி வைத்து ஓட்டு போடுவது குறித்தும், வாக்காளர்கள் நான்கு
ஓட்டுகள் அளிப்பது குறித்தும், ஓட்டுப்பதிவு முடிந்ததும் மேற்கொள்ள வேண்டிய
பணிகள் குறித்த தகவல்களும், பயிற்சியும் அலுவலர் களுக்கு வழங்கப்பட்டது.
பயிற்சிகள், தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலரும், மாவட்ட வழங்கல்
மற்றும் நுகர்வோர் அலுவலர் சங்கரபாண்டியன் மற்றும் தேர்தல் நடத்தும்
அலுவலர்கள் சந்திரசேகர், காளியம்மாள், முருகேசன் ஆகியோரால் ஓட்டுச்
சவாடிஅலுவலர்களுக்கு அளிக்கப்பட்டது.


