/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கூடன்குளம் திட்டத்தை கைவிடக்கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்கூடன்குளம் திட்டத்தை கைவிடக்கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடன்குளம் திட்டத்தை கைவிடக்கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடன்குளம் திட்டத்தை கைவிடக்கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடன்குளம் திட்டத்தை கைவிடக்கோரி தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 22, 2011 12:09 AM
தூத்துக்குடி : கூடன்குளம் அணுஉலை திட்டத்தை கைவிடக்கோரி தூத்துக்குடியில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூடன்குளம் அணுஉலை திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் கரங்கள் மக்கள் அமைப்பு
சார்பில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்திற்கு கரங்கள் மக்கள் அமைப்பின் தலைவர் ரோஸ்மலர் தலைமை
வகித்தார். செல்வி வரவேற்றார்.கரங்கள் மக்கள் அமைப்பினைச் சேர்ந்த
செல்வராணி, அமலோற்பவம், மரகதம், எப்ரோமினா மேரி ஆகியோர் முன்னிலை
வகித்தனர். அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
கிருஷ்ணமூர்த்தி, கடலோர மக்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஜான்சன்,
சங்குழி தொழிலாளர் சங்க தலைவர் இஸ்மாயில், புதிய துறைமுக நாட்டுபடகு மீனவர்
சங்க தலைவர் மாரியப்பன், விவேகானந்தர் கரைவலை சங்க தலைவர் கணேசன், மனித
உரிமைக்கான மக்கள் கூட்டணியின் மாநில செயலாளர் பெனடிக்ட் உட்பட பலர் கலந்து
கொண்டு பேசினர்.நேவிசாள் நன்றி கூறினார். கண்டன ஆர்பாட்டத்தில்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் கரங்கள் மக்கள் அமைப்பினைச்
சேர்ந்த உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.