நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்
நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்
நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும்
ADDED : ஆக 05, 2011 02:33 AM

புதிய திட்டங்களால், நடப்பாண்டில் 3,280 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து, பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பாண்டில், புதிய திட்டங்களால் கிடைக்கும் மின் உற்பத்தித் திறன், 3,280 மெகாவாட்டாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், மின் விநியோகத்தில், கணிசமான முன்னேற்றம் இருக்கும். நடப்பாண்டில் 4,800 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் உடன்குடி விரிவு திட்டம், 9.600 கோடி ரூபாய் செலவில், 1,600 மெகாவாட் உப்பூர் அனல் மின் திட்டம், 3,600 கோடி ரூபாய் செலவில் 40 ஆண்டு பழமை வாய்ந்த எண்ணூர் அனல் மின் இயந்திரத்திற்கு பதிலாக, 600 மெகாவாட் திறன் கொண்ட புதிய மின் இயந்திரம் நிறுவும் திட்டம், 4,800 கோடி ரூபாய் செலவில், 800 மெகாவாட் தூத்துக்குடி நான்காம் நிலை உற்பத்தி திட்டம் தொடங்கப்படும். இதன் மூலம், 22 ஆயிரத்து 800 கோடி ரூபாய் முதலீட்டில், 3,800 மெகாவாட் மின்சார உற்பத்தி கூடுதலாகக் கிடைக்கும். இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.