/உள்ளூர் செய்திகள்/சேலம்/2006ல் களம் இறங்கிய மேயர் வேட்பாளர்கள்2006ல் களம் இறங்கிய மேயர் வேட்பாளர்கள்
2006ல் களம் இறங்கிய மேயர் வேட்பாளர்கள்
2006ல் களம் இறங்கிய மேயர் வேட்பாளர்கள்
2006ல் களம் இறங்கிய மேயர் வேட்பாளர்கள்
ADDED : செப் 12, 2011 03:16 AM
சேலம்: சேலம் மாநகராட்சியில், கடந்த உள்ளாட்சி தேர்தலில், பிரதான கட்சிகள்
சார்பில் களம் இறக்கப்பட்ட மேயர் வேட்பாளர்கள், வரும் உள்ளாட்சி தேர்தலில்
மீண்டும் களம் இறங்கி, மேயர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி
வருகின்றனர்.கடந்த 2006 ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில், சுழற்சி
அடிப்படையில் சேலம் மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த
பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், ஆண்கள் போட்டியிட்டு வந்த, 20
வார்டுகள் பெண்கள் வார்டுகளாக மாற்றப்பட்டது.
மாநகராட்சியில், 12, 22, 44 ஆகிய மூன்று வார்டுகள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை
சேர்ந்த பெண்களுக்கும், 4, 13, 20, 47 ஆகிய வார்டுகள் தாழ்த்தப்பட்ட
சமூகத்தை சேர்ந்த பொது(ஆண்-பெண்) வார்டாக மாற்றம் செய்யப்பட்டது. மேயர்
பதவியை எதிர்பார்த்து காத்திருந்த, அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு, சுழற்சி
அடிப்படையிலான (ஏ)மாற்றம் அதிர்ச்சியை அளித்தது. பிரதான கட்சிகள்,
மாநகராட்சி மேயர் பதவியை பிடிப்பதில் தீவிரமாக களம் இறங்கின.மாநகராட்சி 12
வது வார்டில், அ.தி.மு.க., சார்பில் திலகம், தி.மு.க., சார்பில்
ரேகாபிரியதர்ஷினி, தே.மு.தி.க., சார்பில் ஈஸ்வரி ஆகியோர் களம்
இறக்கப்பட்டனர். ரேகாபிரியதர்ஷினி வெற்றி பெற்றார்.
தேர்தலில், தி.மு.க., 29 வார்டுகளையும், அ.தி.மு.க., 16 வார்டுகளையும்,
பா.ம.க., ஐந்து வார்டுகளையும், தே.மு.தி.க., மூன்று வார்டுகளையும்,
காங்கிரஸ் மூன்று வார்டுகளையும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு வார்டையும்,
சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று வார்டுகளையும் கைப்பற்றினர்.தி.மு.க.,
சார்பில் 12வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேகாபிரியதர்ஷினி
மேயராக தேர்வு செய்யப்பட்டார். சேலம் மாநகராட்சி தாழ்த்தப்பட்ட சமூகத்தை
சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் சார்பில்,
பல்வேறு பரிசீலனைக்கு பின், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வார்டுகளில்
போட்டியிட பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த முறை மேயர் பதவிக்கு குறி வைத்து தேர்தலில் களம் இறக்கப்பட்ட
பெண்கள், வரும் உள்ளாட்சி தேர்தலில், போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்று,
மேயர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றனர்.தி.மு.க.,
மேயர் விருப்ப மனு வழங்கல்சேலம் மாநகராட்சி மேயர் ரேகாபிரியதர்ஷினி,
நேற்று புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்சி அலுவலகத்தில், தி.மு.க., சார்பில்
மீண்டும் போட்டியிடுவதற்கு, விருப்ப மனு வழங்கினார். அ.தி.மு.க., முன்னாள்
மேயர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், கட்சி
அலுவலகத்தில் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றனர்.