/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மரங்கள் நடவு செய்ய தடை: கலெக்டர்உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மரங்கள் நடவு செய்ய தடை: கலெக்டர்
உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மரங்கள் நடவு செய்ய தடை: கலெக்டர்
உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மரங்கள் நடவு செய்ய தடை: கலெக்டர்
உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மரங்கள் நடவு செய்ய தடை: கலெக்டர்
ADDED : ஆக 13, 2011 12:55 AM
நாமக்கல்: 'விளை நிலங்களில் உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அடியில் மரங்களை
நடவு செய்வதை, விவசாயிகள் தவிர்க்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்
குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட
அறிக்கை:நாமக்கல் மாவட்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் மரங்களை நடவு
செய்யும்போது, உயர் மின்னழுத்த மின்சார கம்பிகளுக்கு அடியில் மற்றும் மிக
அருகாமையில் நடவு செய்வதை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான விவசாயிகள்,
மின்சார கம்பிகளுக்கு அடியிலேயே மரங்களை நட்டு வருகின்றனர்.மரங்கள்
வளர்ந்து பெரிதாகும் சூழ்நிலையில், குறிப்பாக தென்னை போன்ற மரங்களின்
தோகைகள் மின்கம்பிகளின் மீது படுகின்றன.
அதனால், மின்கம்பிகள் அறுந்து பல
விதமான இடர்பாடுகளுக்கு உட்படுகிறது.அதை தவிர்க்க, விவசாயிகள் மரங்கள நடவு
செய்யும்போது, மின்கம்பிகளுக்கு அடியில் மரங்களை நடவு செய்வதை தவிர்க்க
வேணடும். மேலும், மின் கம்பிகளை உரசிக் கொண்டு மின் வினியோகத்துக்கு
இடையூறாக வளர்க்கப்ட்டிருக்கும் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.அவ்வாறு
அகற்றப்படவில்லை எனில், மின் வாரியத்தின் மூலம் மரங்களை அகற்ற நடவடிக்கை
எடுக்கப்படும். அதற்கான செலவை, சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து வசூல்
செய்யப்படும். எனவே, மின் ஒயர்களுக்கு அடியில் மரங்களை நடவு செய்வதை
தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


